சுசீந்திரம், ஜீலை 15 –
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு ஈத்தவிளை மகாதேவர் (சாஸ்தா) திருக்கோயிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24ம் ஆண்டின் படி கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ. 18.80 லட்சம் ஆணையர் பொது நல நிதியில் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் துவக்க விழா குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மராமத்து பிரிவு பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் சிவக்குமார், ரமேஷ் குமார், திமுக பத்மநாபபுரம் நகர பொருளாளர் ஸ்ரீராம் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இது போல் முட்டைக்காடு கைலாசத்து மகாதேவர் திருக்கோயிலில் ரூ. 9.70 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளையும் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் துவக்கி வைத்தார்.