ஈரோடு, ஜூன் 10 –
ஈரோடு மாவட்டம் முகாசி பிடாரியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025-26 ன் கீழ் ரூ.3.51 இலட்சம் மதிப்பீட்டில் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, ஜெய்சக்தி நகரில் ஓர் அடுக்கு கப்பி சாலை அமைத்தல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2025-26 ன் கீழ் ரூ.14.25 இலட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை சாலை ஈரோடு சென்னிமலை சாலை (வழி) அர்த்தனாரிபாளையம் பள்ளி வரை தார்ச்சாலை அமைத்தல், ரூ.10.75 இலட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை காங்கயம் சாலை முதல் முதன்மை சுகாதார வருவாய் (வழி) முகாசிப்பிடாரியூர் பஞ்சாயத்து அலுவலகம் வரை தார்ச்சாலை அமைத்தல், ரூ.41.16 இலட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை காங்கயம் சாலை முதல் சென்னிமலை மார்க்கெட் சாலை வரை தார்ச்சாலை அமைத்தல் மற்றும் முகாசி பிடாரியூர் ஊராட்சியில் ரூ.30.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா என மொத்தம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பணிகளுக்கு அமைச்சர் சாமி நாதன் அடிக்கல் நாட்டினார். மேலும் 1 முடிவுற்ற திட்டப்பணியை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அர்பித் ஜெயின், வட்டார வளர்ச்சி அதிகாரி பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.