கருங்கல், ஜுலை 3 –
மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். படிப்பக கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர அப்பகுதியினர் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து படிப்பகம் மற்றும் நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றது. நேற்று படிப்பகம் மற்றும் பயணிகள் நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், கருங்கல் பேரூர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ராஜகிளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.