தேனி, ஜூலை 23 –
தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23.07.2025-ம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பான புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இக்குறை கேட்கும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது புகார்கள் குறித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்பதால் நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.