வேலூர்_07
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்சார அறையில் அதிக வெப்பத்தின் காரணமாக மின்சாரம் மீட்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்போது பணியில் இருந்த சந்தோஷ் என்பவர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த லிப்ட் பாதியிலே நின்றதால் லிப்டில் வந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் என 9 பேர் சிக்கி தவித்தனர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் லிப்ட்டை திறந்து அவர்களை வெளியேற்றினர்
பொதுப்பணித்துறை மின் ஊழியர்களால் பழுது நீக்கப்பட்டு தற்போது ஜெனரேட்டர் மூலம் 20 நிமிடத்திற்கு பிறகு இரண்டு கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது
இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.