மார்த்தாண்டம், அக். 22 –
மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வாளகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று (22.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 37 மையங்களில் முதல்வர் மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மருந்தகங்களில் மருந்து வகைகள் கொண்டு செல்வதற்கு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கம் வாளகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள் மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளதா என துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. என கூறினார்.
இந்த ஆய்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கின் மேலாண்மை இயக்குநர் துறை துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



