மார்த்தாண்டம், ஜூலை 1 –
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது ஸ்மைலின் என்ற பெண் பலியானார். இதையடுத்து இறந்த பெண்ணின் உறவினர்கள் சடலத்துடன் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக சம்பவ இடம் வந்த மார்த்தாண்டம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஆஸ்பத்திரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் சடலத்தை உறவினர்கள் எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மற்றும் அனைத்து பிரிவுகளிலும் அவர் சோதனை நடத்தினார். இந்த ஆய்வில் பத்மநாதபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மருத்துவத்துறை இணை இயக்குனர் மற்றும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு தலைமை மருத்துவர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.