கன்னியாகுமரி, நவ. 26 –
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய சிறப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழக முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மயிலாடி பேரூராட்சியில் நியமன உறுப்பினராக சகாய ராஜேஷ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிபாபு முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் நந்தகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சகாய ராஜேஷ் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அவருக்கு மயிலாடி பேரூர் திமுக செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர், மாவட்ட காங். செயல் தலைவர் மகாலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங். தலைவர் தங்கம் நடேசன், நகர காங்.செயல் தலைவர் ராஜாசிங், நகர காங்.செயற்குழு உறுப்பினர் சுபாஷ் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



