சுசீந்திரம், ஜுலை 9 –
சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் அரிய பெருமாள் விளையைச் சார்ந்தவர் சேகர் (41). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இவரது மனைவி ராணி இவரிடம் கோபித்துக் கொண்டு தனது சகோதரி வீட்டிற்கு கொட்டாரத்திற்கு சென்று விட்டார். பின்பு சேகர் அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவர் நீங்கள் குடித்துவிட்டு வேலைக்கு செல்வதில்லை. எனவே நான் வரமாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் மன விரக்தி அடைந்த சேகர் ஏதோ விஷம் அருந்தி அறியப்பெருமாள்விளையில் உள்ள தனது வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் ராணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்து வந்து தனது கணவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராணி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.