கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி பொதுமக்களுக்கும் கால்நடை குறித்து கருத்தரங்கம் நடத்தினர். உலக கால்நடை தினமாக ஏப்ரல் 27 ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கம்பம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.இந்த கருத்தரங்கத்தில் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் கலப்பு கால்நடை இனங்கள் குறித்தும் அதிக பால் தரும் ஹேல்ஸ்டின் , ஃபிரிஷியன் போன்ற இனங்கள் குறித்தும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கருத்தரங்க கூட்டத்தினை மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி மனிஷா வெகு விமர்சியாக நடத்தினர்.இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவி கால்நடை குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.