மதுரை மே 2,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது மதுரை, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர், திருக்கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் பிரதிநிதி. திருக்கோயில் அறங்காலர்கள். திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 1,22,05,504/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்து இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து ஐநூற்றி நான்கு மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் (தங்கம்) 819 கிராம், மற்றும் பலமாற்று (வெள்ளி) இனங்கள் 642 கிராம் மற்றும் 251 அயல்நாட்டு பணமும் காணிக்கையாக பெறப்பட்டது.