மதுரை, ஜூலை 25 –
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் குன்றி உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக அங்கீகாரச் சான்று (Online Authorisation) பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.