மதுரை, ஜூலை 21 –
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 72-வது விளையாட்டு போட்டி அகஸ் மாநிலத் தலைவி அருட்சகோதரி A. குழந்தை தெரஸ் CIC, தலைமையில் பள்ளி தாளாளர் A. ஞானசௌந்தரி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் S. ஜோஸ்பின் ராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை காவல் புலனாய்வுத்துறை உதவி ஆணையர் G. பெத்துராஜ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் P. இந்திரா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காமராஜர் கலைமன்றம் நிறுவனர் N.S.M.R. முத்தரசு ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக விளையாட்டு தொடர்பான யோகா, பிரமிடு, ஜிம்னாஸ்டிக் போன்ற பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு விருந்தினர்களால் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியரின் மேற்பார்வையில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.