மதுரை, ஜூலை 02 –
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் “இலக்கிய பூங்கா” நீதிபதி விஜயராணி அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ், அல்அமீன் நகர் ஜமாத் தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினர். தலைமையாசிரியர் ஷேக் நபி மற்றும் முதுகலை கணித ஆசிரியர் தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தனர். C.A. கணபதி – G.கஸ்தூரிபாய் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் மரியாதைக்குரிய நீதிபதி விஜயராணி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி, வழக்கறிஞர் லட்சுமி, தமிழ் ஆர்வலர் ஆதித்தா மற்றும் தமிழியக்க பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு C.A. கணபதி – G. கஸ்தூரிபாய் அறக்கட்டளையின் சார்பில் 30 பெற்றோர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாசிங்மெஷின், குளிர் சாதன பெட்டி, டேபிள் ஃபேன், கிரைண்டர், மின் விசிறி, டூல்ஸ்கிட், மிக்சி, 100 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் 600 மாணவர்களுக்கு மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
பள்ளி இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு விருந்தினர்களின் கல்விச் சேவையை பாராட்டி நீதிபதி விஜயராணி அவர்களுக்கு நீதிச்செம்மல் விருது, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி அவர்களுக்கு ஆன்மீகச் செம்மல் விருது, வழக்கறிஞர் லட்சுமி அவர்களுக்கு சமூகக் காவலர் விருது மற்றும் தமிழ் ஆர்வலர் ஆதித்தா அவர்களுக்கு கல்வி புரவலர் விருது ஆகிய விருதுகளை பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.