மதுரை மே 2,
தென் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்தவ சேவையாக செய்து வந்த மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வராக பதவி வகித்த மருத்துவர் ரத்தினவேல் பணி நிறைவு பெற்றார். மதுரை மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென் தமிழகத்திற்கே இதய பகுதியாக திகழக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஒரு நாளில் லட்சக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லக்கூடிய மதுரை ராஜாஜி மருத்துவமனையில்
மிக சவாலான காலகட்டத்திலும் மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ரத்தினவேல், மருத்துவதுறை சார்ந்து வரும் பரிந்துரைகளை தாண்டி எளிய மக்களும் தரமான சிகிச்சை பெற வேண்டும் என்பதை உயரிய நோக்கமாக கொண்டு தம்மை அணுகி வருவோருக்கு உடனடியாக உதவி புரிவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு அதில் வரக்கூடிய கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்க கூடியதில் வல்லவர்.
மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், டவர் பிளாக் கட்டிடம், தோப்பூர் மருத்துவமனை, பாலரங்கபுரம் புற்றுநோய்க்கான சிகிச்சை மையம் என அத்தனையும் தனது சிறப்பு கட்டுப்பாட்டிலும் புதிய அரசு ராஜாஜி மருத்துவமனை டவர் பிளாக் கட்டிடம் மாணவர்களுக்கான விடுதிகள் முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் புதிய ஆடிட்டோரியம் என அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக வழிநடத்தினார். மக்கள் மற்றும் அலுவலர்களை தாண்டி அரசியல் பிரமுகர்களிடமும் மிகச் சிறப்பான உறவை கையாண்டு தான் பணியில் இருக்கும் பொழுதே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் நூற்றாண்டு காணும் மருத்துவக் கல்லூரி பெரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை லட்சிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட முதல்வர் ரத்தினவேல் பல கோடி மதிப்பிலான திட்ட பணிகளை மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தி அரசின் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும்,
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு மற்றும் நோயாளிகளிடம் பாராட்டைப் பெற்றவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சாதனைக் காண்பித்ததோடு முற்றிலும் தூய்மை வளாகமாக மாற்றி வெற்றிகரமாக தனது பணியை முடித்துவிட்டு மனநிறைவோடு பணி நிறைவு பெறுகிறார். மிகச் சிறப்பான தலைமை பண்புடன் மதுரையின் தலைமை அரசு மருத்துவமனையை கையாண்ட முதல்வர் முனைவர் ரத்தினவேல் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோம். அப்பாற்பட்ட மகத்தான சேவை செய்யும் இடத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பும் மருத்துவர்களிடேயே கடும் போட்டி இருந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை பொறுப்பு முதல்வராக மருத்துவத்துறை பேராசிரியர் தர்மராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் கடந்த (ஏப்ரல் 30) பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் மருத்துவ சங்க தலைவர் செந்தில் நிர்வாகிகள் செல்வராணி உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு கல்லூரி முதல்வருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.