மதுரை, ஜூலை 26 –
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி UB மையக் கட்டட பணியினை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் தலைமையில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் ஆகியோர்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை (மருத்துவப் பிரிவு) செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன், உதவி செயற்பொறியாளர் அருண் மற்றும் உதவிப் பொறியாளர் மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.