ராமநாதபுரம், ஜுன் 30 –
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கவாத்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி நடைபெற்றது. கவாத்து பயிற்சியில் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளின் போது ஏற்படும் கலவரங்களில் கலவர கும்பல்களை கலைக்கும் மாக் டிரில் (mock Drill) பயிற்சி நடத்தப்பட்டது. மேற்படி பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்து கொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு பிரச்சனைகளில் ஈடுபடும் கலவரக்காரர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற அறிவுரைகள் வழங்கினார். அனைத்து கூட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கவாத்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்தார்.