ஈரோடு, ஜூலை 9 –
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கிறிஸ்தவ ஆலய செயலாளர் ஸ்டீபன் ராஜ், பொருளாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் கிராமத்தில் சி ஐ ஜி எம் கேத்ரல் சர்ச் காம்பவுண்டில் உள்ள எங்கள் திருச்சபைக்கு பாத்தியப்பட்ட தேவாலய இடம் உள்ளது. இந்த இடம் திருச்சபையின் நிர்வாக குழுவின் நேரடி நிர்வாகத்தின் உரிமையில் உள்ளது. இதனை யாரும் விற்க முடியாது. ஆனால் எங்கள் திருச்சபைக்கு தெரியாமல் உண்மையை மறைத்து விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தி சிலர் பண மோசடி செய்து உள்ளனர். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.