கிருஷ்ணகிரி, செப். 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை நிறைவு விழா மேள தாளங்களுடன் பால்குடம் மற்றும் தட்டுவரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்டாளம்மன் கோவிலுக்கு பால் அபிஷேகம் அதை தொடர்ந்து தீபாராதனைகளும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரு மாத காலமாக மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் நிறைவு நாளான நேற்று காலை மங்கல இசை உடன் இரண்டாவது யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பால்குடம் தட்டு வரிசை 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை நிறைவு பூஜை விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அறங்காவலர் துறை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாளம்மன் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மருதேரி ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



