கன்னியாகுமரி, அக்.26.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2024-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் இருவருக்குத் தண்டனை விதித்துள்ளது. மனக்காவிளையைச் சேர்ந்த ரத்தீஷுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.57,000 அபராதமும், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கானுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.54,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெற்றுத்தர மாவட்ட எஸ்.பி. அன்ஷுல் நாகர் ஐபிஎஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட நீதிமன்றத் தலைமை காவலர் மெர்சி பாய், மார்த்தாண்டம் உட்கோட்ட டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உமா, பாத்திமா பர்வீன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.



