நாகர்கோவில், ஜூலை 29 –
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில துணைத்தலைவரும் மாவட்ட தலைவருமான சதீஷ் முன்னிலையில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏஎஸ்பி மதியழகன், டிஎஸ்பி ஜெயச்சந்திரன், பயிற்சி டிஎஸ்பி இளஞ்செழியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள் சேகர், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், முத்துலட்சுமி மற்றும் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரபீக், ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார், நகர தலைவர் நாராயணன், தொழிலாளர் அணி தலைவர் டேனியல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.