போகலூர், ஜுலை 7 –
மண் மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாட்டை திராவிட நாயகர் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் திரட்டும் மகத்தான பணியின் ஓர் அங்கமாக பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் கிழக்கு ஒன்றியம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கிழக்கு ஒன்றியம் காக்கனேந்தல், காமன் கோட்டை, மற்றும் காமன் கோட்டை ஏடி பகுதி முத்துவயல் வடக்கு ஆகிய பகுதிகளில் பாகம் எண் 225, 223, 224, 246 ஆகிய பூத்துகளில் திமுக கழக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்க்கையை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் போகலூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.கே. கதிரவன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலி ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் ஜோசப், இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு, காமன் கோட்டை கிளைக் கழக செயலாளர் பாதாள வைரவன், மாவட்ட கழகப் பிரதிநிதி பாரதிராஜா, ஒன்றிய பொருளாளர் சரவணன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வீரவனூர் ரியாஸ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சபரி வேணி சரவணன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் முருகேஸ்வரி சம்பத் மற்றும் BLA2, BDA, BLC மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.