கோவை, ஆக. 05 –
சமீபத்தில் வெளியாகி பொள்ளாச்சி முருகாலையா (விஷால் சினிமா) திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கும் ‘கிங்டம்’ திரைப்படத்தை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் எங்களது ஈழ சொந்தங்களை குற்றப்பரம்பரை போல் சித்தரித்தும், தமிழ் தேசிய இன வரலாற்றை சிதைத்தும், ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை தடை விதிக்க கோரி மனு வழங்கப்பட்டது. நிகழ்வில் உடுமலை, பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.