கோவை, ஜூலை 04 –
பொள்ளாச்சி தேர் நிலையம் அருகே உள்ள பார்க் ரோடு கிளை நூலகத்தை மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நூலகத்திற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சி 26-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.K. சாந்தலிங்கம் அவர்கள் தனது சொந்த செலவில் நூலகத்திற்கு மின்விசிறிகள், சுவர் கடிகாரம் போன்றவற்றை நூலக அலுவலர் ஷெஃரிப் அவர்களிடம் வழங்கினார்.
நிகழ்வில் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், மது காந்தி, சத்தியமூர்த்தி, யஸ்வந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.