திருப்பூர், ஜூன் 20 –
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு வேளாள கவுண்டர் பேரவை சார்பாக பெருமாநல்லூரில் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற மின் கட்டண உயர்வு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளான மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகியோரின் 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அவர்களது குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி மரியாதை செலுத்தும் நிகழ்வும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் சார்பாக உயிர் நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட பொதுச் செயலாளர் சட்டமன்றத்தில் எடுத்துக் கூற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன், தம்பி வெங்கடாசலம் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் தேவராஜ் கவுண்டர், தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வேலுமணி, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கரைபுதூர் ராஜேந்திரன், தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதி ராகவன், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சிவலிங்க கவுண்டர், மாணவரணி செயலாளர் தேவ ராமகிருஷ்ணன் மற்றும் மாநில மாநகர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



