குளச்சல், செப். 23 –
குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோவின் அமலதாஸ் (55) ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த வில்சன் ஜெயக்குமார் என்பவர் அமலதாசிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். நேற்று வில்சன் ஜெயக்குமார், ஜோவின் அமலதாஸ் வீட்டு கேட்டை மிதித்து உள்ளே சென்று அங்கு நிறுத்தி இருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கம்பியால் அவரின் முதுகில் அடித்து மிரட்டல் விடுத்து சென்றார். இதில் படுகாயமடைந்த ஜோவின் அமலதாஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குளச்சல் போலீசார் வில்சன் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


