நாகர்கோவில், ஜூன் 28 –
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் செங்காந்தள் அறக்கட்டளை இணைந்து பல்வேறு கிராமங்களில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சி நிறைவுபெற்ற நிலையில் அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் உரையாற்றினார்.