திண்டுக்கல் மே:14
திண்டுக்கல் அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஏராளமான ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள மீனாட்சி நாயக்கன்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து சிறப்பு தடுப்பூசி போடப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.எம். வரதராஜன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் நாட்டாண்மை டாக்டர்.என். எம்.பி. காஜாமைதீன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள்.ஜெ. தங்கம் சகாயராஜ்,
வி.என்.சுஷ்மிதாஸ்ரீ, ஆர். அசோக்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர்
டி.வல்லவன் சிறப்பாக செய்திருந்தார்.