புதுக்கடை, அக். 10 –
புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதி அருவை என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுமணி மகன் நெல்சன் (40) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார். நெல்சன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விழுந்தயம்பலம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் அவரது பின் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து நெல்சனின் அக்கா ஜெயா என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


