விழுப்புரம், ஆகஸ்ட் 26 –
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பில்லூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளி வீடு கட்டி வருவதை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்/போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்தும் ரஹ்மான் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் பா.ரேவதி, துணைச் செயலாளர் திரு.பாலசீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.ஜெ.இ.பத்மஜா பட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், உட்பட பலர் உள்ளனர்.



