தூத்துக்குடி, நவ. 25 –
கருங்குளம் வட்டாரத்தில் ஆண்டு தோறும் சுமார் 1700 ஏக்கர் வாழை பயிாிடப்படுகிறது. வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதல் மற்றும் இயற்கை காரணங்களால் பாதிக்கப்பட்டு
மகசூல் குறையும் போது ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய வாழை விவசாயிகள்
திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் தங்களது வாழை பயிாினை
காப்பீடு செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ராபி பருவத்தில் பயிாிப்படும் வாழை பயிர்க்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தேசிய வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
அல்லது இ-சேவை மையங்களின் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்திட கடைசி நாள்: 28.2.2026. ஏக்கருக்கு ரூபாய் 1756.16 செலுத்தி தங்களுடைய சிட்டா நடப்பு பசலி அடங்கல் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் கொண்டு காப்பீடு செய்து கொள்ளலாம்.


