கிருஷ்ணகிரி, ஜூலை 4 –
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த R.G. புல்லட் கணேசன் என்பவர் மாநிலத் துணைத் தலைவராக இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புல்லட் கணேசன், தலைவர் மருத்துவர் அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். மேலும் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், அனைத்து கூட்டணி கட்சி பிரமுகர்கள், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.