வேலூர், ஜூலை 23 –
வேலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.எஸ். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாரதி வர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகார் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் மருத்துவர் அய்யாவின் ஆணைக்கிணங்க கௌரவ தலைவர் தியாகச் செம்மல் அண்ணன் ஜி.கே. மணி சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைப்படி நடைபெற்றது. கூட்டத்திற்கு அழைப்பாளராக அண்ணன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சங்கர், பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆ.ம. கிருஷ்ணன் மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. செந்தில், திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசு, தலைவர் கே. சௌந்தர் ராஜன், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், தலைவர் மாது கலந்து கூட்டத்தை சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் பரந்தூர் சங்கர், வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி மற்றும் வேலூர் மாநகர தலைவர் தாமு என்கின்ற தாமோதரன், மாநகரச் செயலாளர் ராஜா, இளைஞரணி செயலாளர் சுபாஷ், தலைவர் கோபி, வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் இளங்கோ என்கின்ற வீராசாமி, சத்துவாச்சாரி மண்டல தலைவர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அணைக்கட்டு கிழக்கு சதீஷ், வடக்கு சிவா, பள்ளிகொண்ட பேரூராட்சி செயலாளர் குமரவேல், தலைவர் மணி, காட்பாடி கிழக்கு ஒன்றியம் மணிகண்டன், மேற்கொண்டிய முனிசாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு எஸ்.தேவா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.