திருப்பத்தூர், மே. 12-
காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு வாழ் தலைவராக உள்ள ஷாம் பீட்ரோடா இந்தியர்களை அரேபியர்கள், சீனர்கள், ஆப்பிரிக்காவினர் என கீழ்த்தரமாக கூறியதாக காங்கிரஸ் தலைவர்களை கண்டித்து பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வாசுதேவன் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாட்டின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் இந்தியாவின் வெளிநாடு வாழ் தலைவராக உள்ள ஷாம் பிட்ரோடா இந்தியர்களை பார்த்து அரேபியர்கள், தென்னாப்பிரிக்காவினர், ஆப்பிரிக்காவினர், சீனர்கள் என்று, இந்தியர்களை பார்த்து கீழ்தரமாக விமர்சித்துள்ளதாகவும் அதனை வன்மையாக கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இது குறித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என பாஜாகாவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்திக்க வேண்டும் என கூறியதாகவும் இதன் காரணமாக மாவட்ட துணை தலைவர் அன்பழகன் ஈஸ்வர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். அதன் காரணமாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றதாக கூறினார். மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிறப்பு விருந்தினராக பாஜக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், வேலூர் மாவட்டத்தின் முன்னாள் தலைவருமான தசரதன் கலந்து கொண்டார்.