வேலூர், ஆகஸ்ட் 05 –
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் உள்ள 49 வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன் அந்தப் பகுதியில் பல வருடங்களாக சாலை போடாததால் தெருக்களில் அங்க பிரதேசம் செய்து நூதன முறையில் போராட்டம்.
தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெரு கேகே நகர், ஜீவா நகர், கோவில் மானியம், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி நகர், நடவடி அம்மன் கோவில் தெரு தெருக்கள் 49 வது வார்டில் உட்பட்ட பகுதியில் முறையான சாலைகள் போடப்படாததால் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி முழுவதுமாக சேரும் சகதியமாக மாறி உள்ளது.
இது குறித்து தகவலை மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளாததால் இதனை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மாமன்ற உறுப்பினர் லோகநாதன் தெருகளில் உள்ள சேற்றில் உருண்டு அங்கப்பிரதர்ஷணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் லோகநாதன் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது லோகநாதன் இது குறித்து பலமுறை புகார் அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எங்கள் வார்ட் ஒதுக்கப்பட்ட வார்டாகவே உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களும் சரி செய்து சாலைகளை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவேன் என கூறினார். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியதால் போராட்டத்தை கைவிட்டார். மாமன்ற உறுப்பினரே தரையில் உருண்டு அங்க பிரதர்ஷணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.