பரமக்குடி, ஆக. 3 –
பரமக்குடி ரோட்டரி சங்கத்தின் 2026-ம் ஆண்டிற்கான 22-ம் ஆண்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட கவர்னர் தினேஷ் பாபு தலைமை வகித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவர் சரவணக்குமார் செயலாளராக அன்வர் ராஜா, பொருளாளராக நவீன்குமார் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். விழாவில் எம் எல் ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ரோட்டரி மாவட்ட செயலாளர் சாதிக்அலி, மாவட்ட இயக்குனர் இளங்கோவன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் பரசுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கடந்த ஆண்டுகளில் 30 க்கு மேற்பட்ட குழந்தைகள் உட்பட பொது மக்களுக்கு ரோட்டரி சங்கம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டட அமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நகரை உருவாக்கும் நோக்கத்துடன் ரோட்டரி சங்க நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் தவிர்க்கப்பட்டு பேப்பர் பேனர்கள் மற்றும் பேப்பர் கப்புகள், சில்வர் வாட்டர் பாட்டில் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தனர். தொடர்ந்து பிரமுகர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.