தென்தாமரைகுளம், அக். 09 –
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “பிரதமரின் தூய்மையே சேவை” திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது. இதில், பணகுடி சிவன் கோயில் தெப்பக்குளத்தையும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளையும் தூய்மைச்செய்யும் பணியினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா வழிகாட்டுதலின் படி மாணவர்கள் தூய்மைச் செய்தார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் நீல.மாதவன் தலைமை வகித்தார். இப்பணியில் பொது மருத்துவ அதிகாரி டாக்டர் ஜனனி மற்றும் சந்தோஷ் குமார் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் பங்கு பெற்றிருந்தனர். சேவைத் திட்ட பணிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா செய்திருந்தார்.



