திருப்பூர், மார்ச் 3 –
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர். அதில் கூறியிருப்பது என்னவென்றால்: நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தில் தேசிய தலைவர் சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அதே இடத்தில் ஐயாவிற்கு வெண்கல முழு உருவ சிலை தமிழக அரசு அமைத்து தர வேண்டுமென கோரிக்கை மனு வழங்கினார்கள்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் என்பது ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூக மக்களின் மனதையும் பொது மக்களின் மனதையும் கடுமையாக புண்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர். இயக்கத்தின் நிறுவன தலைவர் இசக்கி ராஜா தேவர் வழிகாட்டுதலின்படி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பால்பாண்டி, தென் மண்டல இளைஞர் அணி தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் காந்தி, மாவட்ட பொருளாளர் மாரி துரை, மாவட்ட துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனுவினை வழங்கினர்.



