கோவை, அக். 23:
ஜாமீனில் வெளியே வந்த நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா, “நான் ஊழல் குற்றவாளி அல்ல; நாங்கள் போராளிகள்” என்று தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியை விமர்சித்துப் பேசிய அவர், மெத் போதைப்பொருள் உற்பத்தி செய்து கைதானவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து கார்த்திகா மேலும் கூறுகையில், “நாங்கள் மக்களுக்காகத் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியினர். ‘கைது செய்து காட்டுங்கள்’ என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் போராளிகள். என்றும் மக்கள் களத்தில் இருப்போம்” என்றார்.



