நாகர்கோவில், ஆகஸ்ட் 6 –
நாகர்கோவில் பீச் ரோடு பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் தர்ஷினி (22). நாகர்கோவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்ணன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீட்டில் தர்ஷினி அறையில் இருந்த அவரது துணிமணிகள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் காணவில்லை. எனவே இதன் அடிப்படையில் தர்ஷினி எங்கு சென்று இருப்பார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.