நாகர்கோவில், ஆக. 06 –
நாம் தமிழர் கட்சி, ஒருங்கிணைந்த குமரி மாவட்டம் சார்பாக ஈழத்தமிழர்களை இழிவுப்படுத்தும் விதிமாக எடுக்கப்பட்ட கிங்டம் திரைப்படம் திரையிடப்படுவதை கண்டித்து வடசேரி ஸ்ரீ கார்த்திகா திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து திரையரங்கு காட்சி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர், மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமோன், நிர்வாகிகள் முத்துகுமார், ஹரிஹரன், சந்திரகுமார், ஜெகின்ஸ், சீலன், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.