போகலூர், ஜுலை 17 –
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா நரிப்பையூர் காமராஜர் திடலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜீவராஜ நாடார் தலைமையில், இளைஞர் பேரவை தலைவர் அந்தோணிராஜ் முன்னிலையில், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருந்தலைவர் திருவுருவப் படத்தை திறந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சங்கத்தின் சார்பாக தலைவர் அவர்களை ஊர்வலமாக மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் அழைத்து சென்றனர். சங்க செயலாளர் உதயகுமார் வரவேற்புரையாற்றினார். சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணன் பெருந்தலைவரை பற்றி சிறப்புரை ஆற்றி, பனை நல வாரியத்தில் உறுப்பினராக பனை தொழிலாளர்களை உறுப்பினராக சேர்ந்து பயனடைய கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 300 தாய்மார்களுக்கு ரூபாய் 1000 பொற்கிழி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அற்புதராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, மாவட்ட தலைவர் கண்டிவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் சதீஷ் மூர்த்தி மற்றும் அருள்ராஜ், அருண் சுரேஷ், சங்கர், முத்துச்செல்வம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அவை தலைவர் ஜார்ஜ், துணைத் தலைவர் முனியராஜ், சாயல்குடி இளைஞர் அணி தலைவர் சுமன் உட்பட ஏராளமான கழக நாடார் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் உறவின்முறை சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.