வேலூர், செப். 01:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டம் தொரப்பாடி ஜீவா நகரில், நவாடியம்மன் கோவில் பின்புறம் உள்ள தெருவில் 19-ம் ஆண்டு சக்தி விநாயகர் விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவையொட்டி சக்தி விநாயகருக்கு பொறி, கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சை, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு பழங்களை படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக, அப்பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் குடும்பத்தினர் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.



