மதுரை, செப்டம்பர் 30 –
மதுரை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சௌடப்ன பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் டில்லி, கல்கத்தா, பஞ்சாப், சண்டிகார், பீகார் மும்பை, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநில அணிகள் மோதின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவி நிஹாரிக தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் மாணவர்கள் ராகேஷ், சாஜித் மூன்றாவது இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியனையும் பிடித்து பள்ளிக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதனைப் பாராட்டும் வகையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர் பாலமுருகன் தலைமையில் விளையாட்டு சிறப்பு பயிற்சியாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேசிய எறிபந்து போட்டியில் 2, 3 வது தேசிய பதக்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவி நிகாரிகா, ராகேஷ், சாஜித் ஆகியோருக்கு பள்ளி மாணவர்கள் கை தட்டி பூங்கொத்து கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனை புரிந்துள்ளனர்.
தற்போது நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் இரண்டாவது மூன்றாவது இடம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இனிவரும் காலங்களில் அயல்நாடுகளில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய வாழ்த்துகிறேன் என கூறினார்.
அதன் பின்னர் பேசிய மாணவி நிகாரிகா கூறுகையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்றுள்ளேன். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் எறிபந்து போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வேன் என்று கூறினார்.
தொடர்ச்சியாக பேசிய மாணவர் சாஜித் தேசிய எரிபந்து போட்டியில் பங்கேற்று மூன்றாவது பரிசை நானும் எனது நண்பன் ராகேஷும் பெற்றோம். அதே போல் மாணவி நிகாரிகா இரண்டாவது பரிசு பெற்றுள்ளார். இனி வரும் காலங்களில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கான பதக்கங்களை வெல்வோம் என கூறினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர் பெற்றோர்கள், ஆசிரிய பெருமக்கள் பங்கேற்றனர்.



