திருப்பூர், ஜூன் 26 –
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி புதிய அலுவலகம் பார்க் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டிடம் தற்பொழுது கான்கிரீட் கட்டும் பணியினை சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான க.செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உடன் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி மூ. நாகராஜ், வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் செ.திலக் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் நந்தினி, பகுதி செயலாளர் உசேன், மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சூர்யா, தெற்கு மாநகர துணைச் செயலாளர் மகாலட்சுமி, எல்பிஎஃப் மாவட்ட தலைவர் பி எஸ் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.