தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 07 –
தென்தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என். தாமரை பாரதி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், நிர்வாகிகள் கே.கே. நாதன், அஜுராம், ஜோனி மோசஸ், ஆசிரியர் ஜேக்கப், சுதன், மதியழகன், சுப இளங்கோ, ஜோஸ்வா, நாகமணி, கனகராஜன், செல்வன், பெத்வேல் நாயகம், சாமுவேல், வழக்கறிஞர் ஆல்பர்ட் மற்றும் பலர் உள்ளனர்.