தூத்துக்குடி, ஆக. 07 –
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டூவிபுரம் ஐந்தாவது தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துடன் தொடங்கிய ஊர்வலம், கலைஞர் அரங்கம் வரை நடந்தது. தொடர்ந்து அங்கு உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மத்திய செயலாளர் காசி விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுமுகம், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், மருத்துவ அணி அருண் குமார், வழக்கறிஞர் அணி குபேர், அய்யலக அணி எஸ்எஸ்பி அசோக், மாநகர அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மகளிர் அணி கவிதா, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.