திருவெண்ணெய்நல்லூர், ஜுலை 4 –
விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ ஆணைக்கிணங்க தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கெளதமசிகாமணி ஆலோசனைப்படி நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் இல்லம் தோறும் சென்று மண், மொழி, மானம் காக்க இணைவோம் ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய வாக்காளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பாக முகவர்கள், பிஎல்ஏ – 2 பிடிஏ நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.