விழுப்புரம், ஆகஸ்ட் 9 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதுலுக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலரும் திமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளருமான வீராசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கூழ் குடம் எடுத்து வந்து வீதி வீதியாக சென்று இங்கு உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தர்மகத்தா, ஊர் நாட்டாமைகள், பொதுமக்கள், இளைஞர்கள், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்று இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது.