திருவெண்ணெய்நல்லூர், ஆகஸ்ட் 1 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் கிராமத்தில் அரசு பஸ் போக்குவரத்து வசதியினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எரளூர் முதல் ஏனாதிமங்கலம், சிறுவானூர், மழவராயனூர் ஏரிக்கரை வழியாக திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி, மனக்குப்பம் வரை சென்று பின்னர் மீண்டும் அதே வழியில் கரடிப்பாக்கம், பிடாகம் வழியாக விழுப்புரம் வரை செல்லும் புதிய வழித்தடத்திற்கான அரசு பஸ் போக்குவரத்து வசதியினை முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், நகர செயலாளர் பூக்கடை கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், தொ.மு.ச பொதுச் செயலாளர் சேகர், தொ.மு.ச நிர்வாக பணியாளர் சங்க பொதுச் செயலாளர் வாலிபால் மணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, மோகன், சுதா சீனுவாசன், ஏழுமலை, கிருஷ்ணராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.